செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய விண்கலம்... முதல் ஆடியோவை வெளியிட்ட நாசா விஞ்ஞானிகள்

Report
0Shares

அமெரிக்காவின் பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது பதிவுசெய்யப்பட்ட முதல் அடியோ பதிவினை நாசா வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்ததா? என்பதைக் கண்டறிய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நீண்ட காலமாக முயற்சி செய்த வருகின்றது.

இந்த ஆய்விற்காக கடந்த ஆண்டு ஜுலை மாதம், நாசா அனுப்பிய விண்கலம் கடந்த 18ம் திகதி வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில். பெர்சவரன்ஸ் விண்கலம் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ பதிவியை நாசா வெளியிட்டுள்ளது.

இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் 25 கமெராக்கால் மற்றும் 2 மைக்ரோ போன்கள் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.