டேக்காப் ஆகி சில நிமிடத்தில் எஞ்ஜினில் ஏற்பட்ட தீ.. சாமர்த்தியமாக செயல்பட்டு 231 பயணிகளை காப்பாற்றிய விமானி

Report
0Shares

வானில் பறந்த விமானம் ஆனது சில நிமிடத்திலேயே என்ஜினில் தீ பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவில், புளோரிடா மாகாணத் தலைநகர் டெனவர் விமான நிலையத்திலிருந்து யுனெடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 231 பயணிகள் மற்றும் 10 சிப்பந்திகளுடன் ஹோனாலுலு நகருக்கு புறப்பட்டது.

டேப் ஆப் ஆன சிறிது நேரத்தில், விமானத்தில் வலது புற இன்ஜீனில் தீ பற்றியது. இன்ஜீன் முழுவதும் தீ எரிய தொடங்கியது. தொடர்ந்து, இன்ஜீனின் பாகங்கள் கீழே விழத் தொடங்கின.

இதனையடுத்து, உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை மீண்டும் டென்வெர் விமான நிலையத்துக்கு அவசரமாகத் திரும்பி பத்திரமாக தரையிறக்கினார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், விமானத்தின் பாகங்கள் தரையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு கழகம், தரையில் சிதறிக் கிடக்கும் இன்ஜின் பாகங்களை யாரும் தொட வேண்டாம் என்றும், இந்த பாகங்கள் ஆய்வுக்கு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விமானத்தில் உள்ள எஞ்சின் 26 வருடங்கள் பழமையான PW 4000 ரக இன்ஜின் என்றும், எஞ்சினின் மின்விசிறியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.