190 கிலோ எடையுடன் இருந்த கொழு கொழு குண்டுபையன்: இப்போ எப்படியிருக்கான் தெரியுமா?

Report
0Shares

190 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவனான Arya Permana, தற்போது எடையை குறைத்து அழகிய இளைஞனாய் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இந்தோனேசியாவை சேர்ந்த Arya, அதிக எடையுடன் இருந்ததால் எந்த வேலையும் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.

அன்றாட வேலைகளை கூட அவனால் செய்ய முடியாமல் போனதுடன், பள்ளிக்கும் செல்ல முடியாமல் போனது.

இதனையடுத்து Aryaவுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் Aryaவின் இரைப்பையின் அளவை குறைத்தனர்.

இதனால் Arya உணவு எடுத்துக் கொள்ளும் அளவானது குறைந்தது. இதையடுத்து மூன்றே வாரங்களில் Aryaவின் உடல் எடை 186 கிலோவிலிருந்து 169 கிலோவாகக் குறைந்தது.

அதன்பிறகு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை 82 கிலோவாக Arya குறைந்துள்ளான்.

தற்போது மற்ற சிறுவர்களை போன்று ஓடியாடி விளையாடும் Arya , தனக்கு பிடித்த கூடைப்பந்து விளையாட்டை விளையாடி மகிழ்கிறான்.

இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.