கணவரின் கணவில் வந்த எண்ணுக்கு விழுந்த அதிர்ஷ்டம்; ஒரே நாளில் கோடீஸ்வரியான பெண்

Report
0Shares

கணவரின் கனவில் வந்த எண்களை வைத்து பெண்ணுக்கு 342 கோடி ரூபாய் லாட்டரி பரிசு வென்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்த லாட்டரியில் பல ஏழை எளியவர்கள் அதிர்ஷ்டத்தால் லட்சத்தை அள்ளியது குறித்து கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், கனடாவில் சமீபத்தில் ரூபாய் 342 கோடி பரிசு லாட்டரி ஒன்றின் குலுக்கல் நடந்தது.

அதில், அந்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 342 கோடி பரிசை வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்

மேலும், இவர் பரிசை வென்றதும் பேட்டியில் கூறிய போது “என் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து தான் கடந்த 20 வருடங்களாக லாட்டரி டிக்கெட் வாங்கி பரிசுகளை பெற்று வருகிறேன்.

தற்போது சமீபத்தில் கணவர் கணவர் கனவில் வந்து கூறிய எண்களை வைத்து தான் இந்த லாட்டரி சீட்டையும் வாங்கினேன்.

அதில் எனக்கு 342 கோடி பரிசு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கணவர் கனவில் வந்த எண்களை வைத்து 342 கோடி பரிசுகளை லாட்டரியில் வென்ற பெண் குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.