ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வருபவர் மோனிகா கிரீன்.
இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, தனது வீட்டில் சமீப காலமாக சில பொருட்கள் ஒரு இடத்தில் வைத்தால் அவை வைத்த இடத்தில் இல்லாமல் போவதை கவனித்துள்ளார்.
இதனால், இவை தனது குழந்தைகளின் செயலாக இருக்கலாம் என அவர்களை கண்டித்துள்ளார்.
இதனிடையே, மோனிகா கிரீன் சமீபத்தில் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது, மருத்துவமனை சென்றவர் சற்று முன்னதாக வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்குள் சென்ற மோனிகா கிரீன், வீட்டின் சமையல் அறையில் இருந்து ஏதோ வாசனை வருவதை உணர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், மோனிகா வீட்டின் சமையல் அறையில் பாதி சமைத்த உணவும், கடாயில் சிக்கனும் வெந்துகொண்டிருந்தது.
மேலும், வீட்டில் இருந்த டிவி ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோனிகா வீடு முழுவதும் சோதனை செய்தபோது அவர் வீட்டின் பின்பக்க கதவு திறந்திருந்தது.
இதனால், உடனே இந்த சம்பவம் குறித்து மோனிகா காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, வீட்டிற்கு வந்த போலீசார் மோனிகாவின் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் மேற்பகுதி சுவற்றில் (ceiling) மிகப்பெரிய ஓட்டை இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் அந்த ஓட்டைக்குள் சென்று பார்த்தபோது அங்கு யாரோ ஒருவர் சில நாட்கள் தங்கியிருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மோனிகா, வீட்டில் இருப்பவர்களுக்கே தெரியாமல் இங்கு இத்தனை நாட்களாக தங்கி இருந்தது யார்? அவரின் நோக்கம் என்ன? என தெரியமால் குழப்பத்தில் உள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த மர்ம நபரை தேடிவருகின்றனர்.