நடிகைகள் மாலத்தீவுக்கு படையெடுக்க காரணம், என்ன தெரியுமா?.. எவ்வளவு இருந்தால் சுற்றிப்பார்க்கலாம்

Report
620Shares

உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரிய மிக அழகிய பல சிறிய தீவுகளால் ஆன நாடு தான் மாலத் தீவு.

இவை, சுமார் 1,190 தீவுகளைக் கொண்ட ஒரு நாடு இது. இவற்றில் 200 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள்

மேலும், நிலத்தை விட தண்ணீர் கொண்டு, மாலத்தீவுகள் உண்மையான தீவு நாடு. 26 பவள அட்லாண்ட்கள் முழுவதும் மாறி மாலத்தீவுகள், இந்திய பெருங்கடலில் 35,000 சதுர மைல் பரப்பளவில் 115 சதுர மைல்கள் பரப்பளவில் இணைந்த நிலப்பகுதியை மட்டுமே கொண்டுள்ளன.

இதனால், வெப்பமண்டல சூழல் ஆண்டு முழுவதும் மேல் 80 பரான்ஹீட் வெப்பநிலையில் வெப்பம் இருக்கும் போது, ​​இயற்கை தடைகள் இல்லாத ஒரு இனிமையான கடல் காற்று பார்வையாளர்கள் குளிர்விக்க அனுமதிக்கிறது.

இப்படி மாலாத்தீவின் அழகை கூற ஒரு கட்டுரை போதாது. அதனால் தான் என்னவே கோலிவுட், பாலிவுட், டோலிவுட் அழகிகள் அனைவரும் வெகேஷன் என்றாலே முதலில் மாலத்தீவுக்கு படை எடுக்கின்றனர்.

அந்த வகையில், மாலத்தீவு பிரபல நடிகைகள் படையெடுத்து செல்வது ஏன்? நடுத்தர குடும்பத்தினர்கள் செல்ல எவ்வளவு செலவு ஆகும் என்பதை பற்றி அறிவோம்.

மாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம். கப்பல் மூலம் செல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாள்கள் ஆகும்.

விமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். சென்னையில் இருந்து சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதேபோல், விமான டிக்கெட்டுகளுடன் கூடிய முழு பேக்கேஜ்களும் பல கிடைக்கின்றன. இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும்.

அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் தேவை. தற்போது கொரோனா நேரம் என்பதால், அதற்கான சில கட்டுப்பாடுகளும் தற்போது உள்ளன.

தேனிலவு செல்வது, குடும்பத்தினருடன் செல்வது, நண்பர்களுடனான சுற்றுலா என பல வகையான பேக்கேஜ்கள் செல்லும் நபர்களுக்கு ஏற்ப இருக்கின்றன. தேன்நிலவு பேக்கேஜ் என்றால், 3 இரவுகள் கொண்ட சுற்றுலாவானது, ரூ.40 ஆயிரம் (இருவருக்கு) முதல் உள்ளன.

இந்த விலைக்குள்ளேயே சாப்பாடு, விமானம், தங்குமிடம், சுற்றிப் பார்க்கும் செலவுகள் இடங்கள். இதேபோல ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் என பல பேக்கேஜ்களை கொண்டுள்ளது மாலத்தீவு. இதேபோல் குடும்பத்தினருடன் செல்வதற்கு, சீசன் சுற்றுலா என பல பேக்கேஜ்களை கொண்டுள்ளது மாலத்தீவு சுற்றுலா.

ஒரு லட்சம் ரூபாய்க்குள் ஒரு வெளிநாட்டு சுற்றுலா என்று தேர்வு செய்தால், அதில் நிச்சயம் மாலத்தீவு இருக்கும். நம்முடைய பட்ஜெட் என்னவென்பதற்கு ஏற்ப தங்குமிடும், மாலத்தீவில் செல்லுமிடம், தங்கும் நாள்களை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.

இப்படி செலவு குறைவாக இருக்குமிடத்திற்குத்தான் பிரபலங்கள் செல்கிறார்களா என்றுகூட உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

வெளியான தகவலின்படி, கொரோனாவுக்கு பிறகு தற்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ள மாலத்தீவு அரசு, பிரபலங்களுக்கு இலவச அழைப்பைக் கொடுத்து, அவர்கள் மூலம் விளம்பரத்தைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

மாலத்தீவில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் ஒவ்வொரு புகைப்படங்களும் சுற்றுலாவுக்கான விளம்பரம் என்றே திட்டமிடுகிறது அந்நாட்டு அரசு.

தொடர்ந்து அடுத்தடுத்த நடிகைகள் பலரும் மாலத்தீவில் குவிய இப்படி ஒரு காரணம் இருக்கிறதா என்று தற்போது வாய்பிளக்கின்றனர் ரசிகர்கள்.

loading...