அமெரிக்காவில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா... நேற்றைய தினத்தில் மட்டும் இத்தனை லட்சமா?

Report
134Shares

அமெரிக்காவில் காட்டுத்தீயாய் பரவிவரும் கொரோனா தொற்றினால் நேற்று மட்டும் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.78 கோடியாகும்.

இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,376,763 ஆகும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியாகும்.

அமெரிக்காவில் பயங்கர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் நேற்றைய தினத்தில் ஒரே நாளில் 2 லட்சத்தினை தொட்டுள்ளது.

மேலும் அமெரிக்க அதிபரான ட்ரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர்(42) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.