குழந்தையை பெற்றெடுத்து பீரிசரில் வைத்த 14 வயது சிறுமி... உண்மை தெரிந்த போது நடந்தது என்ன?

Report
592Shares

14 வயது சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை பெற்றோருக்கு தெரியாமல் ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள சைபீரியாவை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவருக்கு சமீபத்தில் வயிறு பெரியதாகிக் கொண்டே வந்தது.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் தாயிடம் கேட்தற்கு சிறுமி உடல் எடை அதிகரித்துள்ளதால் அப்படி இருக்கிறது என கூறியுள்ளார்.

ஆனால் சிறுமி தான் கர்ப்பமாக இருந்தது தெரிந்தும், பயத்தில் பெற்றோர்களிடமிருந்து மறைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு திடீரென குழந்தை பிறந்துள்ளதையடுத்து, வீட்டில் இருந்த தந்தைக்கு தெரியாமல் குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து பிரீசர் பாக்ஸில் வைத்து மறைத்துவிட்டார்.

பின்பு வீட்டிலேயே பிரசவம் ஆனதால் ரத்தப்போக்கு அதிகமாக இருந்துள்ளதை அவதானித்த தாய், குடல் அலர்சியாக இருக்கலாம் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஆம்புலன்ஸில் வந்த மருத்துவரிடம் சிறுமி பயத்தில் தான் கர்ப்பமாக இருந்தது குறித்தும், குழந்தையை மறைத்து வைத்த உண்மைகளை கூறியுள்ளார்.

குழந்தையை காப்பாற்ற முற்பட்ட போது அதிக நேரம் பிளாஸ்டிக் கவரில் மூடி ப்ரீசர் பாக்ஸில் இருந்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் சிறுமியின் உடலும் மோசமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

விசாரணை மேற்கொள்கையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு 16 வயது சிறுவன் தான் காரணம் என்றும் இருவரும் இந்த விடுமுறையில் காதலை முறித்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

loading...