வயிறுவலியால் துடித்து பாத்ரூமிற்கு ஓடிய நபர்... வெளியே வந்தது என்ன தெரியுமா?

Report
1289Shares

தாய்லாந்தில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட நபர் கழிவறைக்குள் ஓடியநிலையில் அங்கு கண்ட நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Duangchan Dachyodde(43). இவருக்கு அவ்வப்போது வயிற்று வலி ஏற்பட்டு வந்த நிலையில், இதனை சாதாரண வயிற்று வலியாக இருக்கலாம் என நினைத்து தனது அன்றாட வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வயிற்று வலி அதிகரித்த நிலையில், கழிவறைக்குள் சென்று, அங்கு கழிவறையில் அமர்ந்த போது அவரது வயிற்றிலிருந்து, ஆசனவாய் மூலமான 17 அடி நீளம் கொண்ட புழு ஒன்று வெளியேறியுள்ளது.

இதைப் பார்த்துப் பயந்து போன அவர், உடனே அதை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். புழுவை அவதானித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, இது நாடாப் புழு என்றும் இதனால் வேறு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு வயிற்றில் புழு ஏற்படுவது எவ்வாறு என்பதையும் மருத்துவர் விவரித்துள்ளார். பச்சை மாமிசம் சாப்பிடுவதால் இதுபோன்ற புழு வயிற்றில் வளரும் என விளக்கினார்.

அந்த புழுவின் முட்டைகள் மாமிசத்தில் இருக்கும். நாம் மாமிசத்தை நன்கு வேகவைக்காமலோ, அல்லது பச்சையாகவோ சாப்பிடும் போது அவை வயிற்றுக்குள் சென்று புழுவாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் குறித்த நபரின் வயிற்றுக்குள் மேலும் புழுக்கள் இருக்கலாம் என்று கூறிய அவற்றினை வெளியேற்றுவதற்கும் மருந்துகளைக் கொடுத்துள்ளார்.