மாஸ்க் பதிலாக பேருந்தில் பாம்பை அணிந்திருந்த நபர்! திகைத்துப்போன சக பயணிகள்

Report
180Shares

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதிலாக பாம்பை கழுத்தில் அணிருந்த சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில், நபர் ஒருவர், மாஸ்குக்கு பதிலாக பாம்பு ஒன்றை கழுத்தில் அணிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த அந்த பயணி மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதியை கேலி செய்யும் விதமாக, பாம்பினை அணிந்து இருந்தது தெரியவந்தது.

இந்த காட்சியை நேரில் கண்ட 46 வயது சக பெண் பயணி ஒருவர் கூறும்போது முதலில் அவர் ஒரு வேடிக்கையான மாஸ்க் அணிந்திருந்ததாக, தான் நினைத்ததாகவும் சற்று அவர் கழுத்தில் இருந்து இறங்கி கைப்பிடியில் ஊர்ந்து சென்ற போதுதான் அவர் அணிந்திருந்தது பாம்பு என்பதையே உறுதி செய்ததாகவும் அதை கண்டதும் திகைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.