ஆபத்தான கிணற்றுக்குள் சிக்கிய நபர்.. தொப்பையால் உயிர் பிழைத்த அதிசயன்.. வைரல் வீடியோ!

Report
572Shares

சீனாவில் உள்ள லுயோயாங் நகரத்தை சேர்ந்தவர் லியு(28). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் லியு தனது வீட்டின் அருகே இருக்கும் உறைகிணறு ஒன்றுக்குள் குதித்துள்ளார்.

மிகவும் குறுகலான அந்த கிணற்றுக்குள் லியுவின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் முழுவதும் உள்ளே சென்று மாட்டிக்கொண்டது.

இதையடுத்து, லியு எடை அதிக உடையவராக இருந்ததால், தொப்பையால் அவரது முழு உடலும் உறைகிணறுக்குள் செல்லாமல் தடுத்துவிட்டது. இதனால் லியு அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.

இருப்பினும் அவரது பாதி உடல்உறைகிணற்றுக்குள் மாட்டிகொண்டநிலையில் இந்த தகவல் தீயணைப்புத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு லியுவின் இடுப்பில் கயிரைக்கட்டி அவரை வெளியே மீட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.