பூமியை பிளக்கும் அளவுக்கு லெபானானில் வெடித்த குண்டு.. இதுவரை எத்தனை பேர் உயிரிழப்பு?..

Report
569Shares

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டதில், கட்டிடங்கள் பயங்கரமாக சேதமாகின.

மேலும், இந்த குண்டுவெடிப்பில் 100க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

10க்கும்மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்குகளில் நெருப்புடன் புகை வந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. சில மைல் தூரத்திற்கு பூமியே குழுங்கியது. இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

குண்டு வெடித்தபின் ஏற்பட்ட அதிர்வால் சுற்றியிருந்த கட்டிடங்கள் மிகப்பெரிய சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவரவில்லை. விபத்தா அல்லது சதி செயலா என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசன் தெரிவித்தார். துறைமுகப் பகுதியைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் போராடி வருகின்றன.

loading...