போனில் வந்த தகவல்... பொது இடத்தில் கதறித் துடித்த இளம்பெண்! தலைதெறிக்க ஓடிய நபர்கள்

Report
275Shares

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிந்த ஒரு பெண் பொது இடத்தில் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. எனினும் அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில் சீனாவில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிந்த ஒரு பெண் பொது இடத்தில் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பீஜிங்கின் வணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேட்டதும் அப்பெண் அலறிக்கொண்டே அழுகிறார். இதனைக்கண்ட அருகில் இருப்பவர்கள் அந்தப்பெண்ணின் நிலமையைப் புரிந்துகொண்டு அங்கிருந்து விலகிச் செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்போது ஆம்புலன்சில் வரும் சுகாதார ஊழியர் ஒருவர் அந்தப் பெண்ணை அங்கிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த வீடியோக்களை பலரும் பகிர்ந்து அந்தப்பெண் விரைவில் குணமடைய வேண்டுமென வேண்டி வருகின்றனர். அதேநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டாலும் மன தைரியத்துடன் எதிர்கொண்டால் வெற்றி பெறலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

loading...