இரண்டு மாதங்கள் கழித்து திடீரென வந்த தாய்... கவனிக்காமல் இருந்த குழந்தைகள்! இறுதியில் கண்கலங்க வைத்த பாசம்

Report
479Shares

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் சுசி வாகன். மருத்துவப் பணியாளரான இவருக்கு ஹெட்டி(7), பெல்லா(9) என இரண்டு மகள்கள் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒன்பது வாரங்களாக சுசி, இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் அவரது குழந்தைகள் தனது தங்கையின் வீட்டில் வசித்து வந்தனர். இதனையடுத்து சுமார் ஒன்பது வாரங்களுக்கு பிறகு சுசி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

தாய் வீட்டிற்கு வரும் தகவல் மகள்களிடம் தெரிவிக்காத நிலையில், தனது குழந்தைகளுக்கு ஆச்சர்யமளிக்க எண்ணிய சுசி, குழந்தைகள் லேப்டாப்பில் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது பின்னால் சென்று நின்றார்.

தாய் பின்னாடி நிற்பதை உணராத குழந்தைகள், தொடர்ந்து லேப்டாப்பை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எதேச்சையாக பெல்லா திரும்ப, தாயைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இளைய மகளும் தனது தாயை காண இருவரும் தாயைக் கட்டியணைத்து கதறி அழுதுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

loading...