தூங்கிக்கொண்டிருந்த 13 வயது மகளை தந்தை செய்த படுபயங்கரமான காரியம்...

Report
739Shares

ஈரானில் தனது 13 வயது மகள் 35 வயதுடைய நபரைக் காதலித்ததால், தந்தை ஒருவர் அவரைக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரைச் சேர்ந்த அஷ்ரஃபி(13). இந்த சிறுமி தான் காதலிக்கும் நபருடன் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், சிறுமியின் தந்தை பொலிசில் மகளைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியைக் கண்டுபிடித்த பொலிசாரிடம் தனது நியாயத்தினை சிறுமி கூறியுள்ளார். தனக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று தந்தையுடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் இதனை கண்டுகொள்ளாத பொலிசார் குறித்த சிறுமியை தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இரவில் அஷ்ரஃபி அசந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், தான் வளர்த்த செல்ல மகள் என்றும் பாராமல், அவரது தந்தை அஷ்ரஃபியின் தலையை அரிவாளால் கொடூரமாக வெட்டி எடுத்து கொலை செய்துள்ளார்.

மகளைக் கொலை செய்த பின்னர், தந்தை கையில் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் ஈரானை உலுக்கியுள்ள நிலையில், இந்த கொடூர கொலையைக் கவுரவக்கொலை என, உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிள்ளைகளை வழிநடத்தவேண்டிய பெற்றோர்களே இவ்வாறு செய்துள்ளதால் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

loading...