கொரோனாவிற்கு எதிராக களமிறங்கிய பில்கேட்ஸ்!... உருவாக்கப்பட்டது கொரோனா தடுப்பூசி.... இன்று சோதனை

Report
953Shares

INO-4800 என்ற கொரோனா தடுப்பூசியை உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸின் நிறுவனம் இன்று சோதனை செய்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தற்போது அதன் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகிவிட்டு உலகம் முழுக்க பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

கொரோனா மனிதர்களை தாக்கும் முன்பே, கொரோனா போல ஒரு வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதாவது, எபோலா வைரசில் இருந்து நாம் தப்பித்துவிட்டோம்.. பல பணக்கார நாடுகள் எபோலாவில் இருந்து தப்பித்து விட்டது.

ஆனால் இன்னொருமுறை நாம் இப்படி அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டோம். அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

6 வருடத்திற்கு முன்பே உலகை மிக கொடுமையான வைரஸ் தாக்க வாய்ப்புள்ளது என்று பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி உலகம் முழுக்க நோய்களுக்கு எதிராக கடுமையான முயற்சிகளை, ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தார்.

தனது தொண்டு நிறுவனங்கள் மூலம் பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவி செய்த இவர், அமெரிக்காவில் மருந்துவ ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளித்தார். சார்ஸ் வைரஸ் தொடர்பாக ஆராய்ச்சிகளுக்கு அவ்வப்போது இவரின் தொண்டு நிறுவனம் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

உலகை கொரோனா தாக்கியதிலிருந்து, அதன் மீது தனது கவனத்தை மிக தீவிரமாக செலுத்தி வருகிறார் பில்கேட்ஸ்.கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பான திட்டங்களை அரசுக்கு அளித்து வருவதோடு, தங்களது 7 நிறுவனங்களையும் இதற்காக உருவாக்கி உள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள 7 நிறுவனங்களும் தனித்தனியாக கொரோனா மருந்துகளை உருவாக்க களமிறங்கியுள்ளது. இதிலிருந்து 2 நிறுவனத்தின் மருந்துகள் கடைசியாக தேர்வு செய்யப்பட்டு அது மனிதர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளார்.

ஒரு மருந்து கண்டுபிடித்து அது தோல்வியில் முடிந்தால், அடுத்த மருந்து கண்டுபிடிப்பதற்கு 6 மாதகாலமாகுமாம். ஒரு மருந்து கண்டுபிடிப்பதற்கே பல பில்லியன் டொலர் செலவாகும் நிலையில், தனித்தனியாக 7 நிறுவனங்களில் 7 மருந்துகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

7 மருந்து ஆராய்ச்சிகளில் இவர் கடைசியாக தேர்வு செய்யும் 2 மருந்துகள் மட்டுமே பயன்படும். மீதம் உள்ள 5 மருந்து சோதனைக்கான செலவு வீண் தான். ஆனால் தற்போது பணத்தை விட நேரம்தான் முக்கியம். மக்கள் உயிர்தான் முக்கியம்.

அதனால் 7 மருந்துகளின் ஆராய்ச்சிகளை ஒன்றாக செய்ய உத்தரவிட்டு இருக்கிறேன். தற்போது முதல் மருந்து சோதனைக்கு தயார் ஆகி உள்ளது என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

ஆம் பில்கேட்ஸ் உருவாக்கி உள்ள நிறுவனங்களில் ஒன்றான இனோவியா பார்மாசெட்டிக்கல்ஸ் இந்த மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த மருந்துக்கு INO-4800 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த மருந்தை சோதனை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கனவே கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், மருந்து ஒன்றை கண்டுபிடித்து சோதனை செய்து வருகிறது. தற்போது INO-4800 சோதனை செய்யப்பட உள்ளது.

இந்த மருந்தை இரண்டு கட்டமாக சோதனை செய்ய உள்ளனர். முதலில் அமெரிக்காவின் பிலடேஃபியா, மிசோரி ஆகிய இடங்களில் உள்ள சோதனை கூடங்களில் இந்த சோதனை நடக்கும். அங்கு 40 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்படும். அவர்களுக்கு 4 வார இடைவெளியில் சோதனைகள் செய்யப்படும்.

இந்த முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தால் அதன்பின் 100 பேரிடம் சோதனைகள் தொடரும். குறைந்தது 1 வருடத்திற்கு இந்த சோதனைகள் INO-4800 மருந்து மூலம் செய்யப்படும். ஆராய்ச்சி தொடங்கி வெறும் 1 மாதத்தில் இந்த INO-4800 மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இது கொரோனா தடுப்பூசி போல செயல்படும். முதற்கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை இதற்காக உருவாக்க உள்ளனர். மீதம் உள்ள 6 மருந்துகளும் இதேபோல் சோதனை செய்யப்படும். அதன்பின் கடைசியில் சிறப்பான இரண்டு மருந்துகள் தேர்வு செய்யப்படும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.

loading...