இந்த இரண்டு விஷயத்தால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்.. அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட நாடு!

Report
983Shares

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகிறது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் தான்.

ஒரே நாளில் 500- க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக நார்வே நாடு அறிவித்துள்ளது.

நார்வேயில் 5763 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். 76 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி நார்வே நாட்டில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து உடனடியாக நாடு முழுவதும் 20 பரிசோதனை மையங்களை அமைத்தது.

இதையடுத்து மார்ச் 12-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவினையும் அந்நாடு உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தது. நார்வே நாட்டின் கொரோனா பரிசோதனை மிகப்பெரிய அளவில் இருந்தது.

அமெரிக்காவில் தற்போது 10 லட்சம் பேருக்கு 18 ஆயிரத்து 996 பேருக்கு பரிசோதனை என்ற அளவிலேயே பரிசோதனை இருக்கும் நிலையில் நார்வேயில் 10 லட்சம் பேருக்கு ஒரு லட்சத்து ஆயிரத்து 986 என்ற விகிதத்தில் பரிசோதனை இருந்தது.

மேலும், அமெரிக்காவை விட ஐந்து மடங்கு வேகமாக நோயாளிகளை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சையை நார்வே அளித்தது வந்தது. நோய் அறிகுறி தென்பட்ட நிலையிலேயே கண்டறியப்பட்டதால் அங்கு கொரோனா சமூக பரவலாக மாறாமல் தடுக்கப்பட்டது.

இதன் காரணமாக ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து கொரோனா தொற்று படி படியாக குறைய ஆரம்பித்து உள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவு மற்றும் விரைவான பரிசோதனை மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அந்நாடு அதிகார பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

loading...