எங்களுக்காக வீட்டிலேயே இருங்கள்.. மருத்துவர்கள் வெளியிட்ட டிக்டாக் வீடியோ.. இணையத்தில் வைரல்!

Report
258Shares

தயவுசெய்து வீட்டில் இருங்கள்.. 5 மருத்துவர்கள் நடனமாடி வெளியிட்ட டிக்டாக் வீடியோ.. இணையத்தில் வைரல்!

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக மருத்துவர்கள் சிலர் செய்த டிக் டாக் வீடியோ காணொளியானது இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்துவதற்காக யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உலக நாடுகள் அனைத்தும் அறிவுறுத்தியுள்ளன.

இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இருக்கின்றனர்.

ஆனாலும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்கள் குடும்பத்தினருடன் இருக்காமல் கொரோனா வைரஸுக்கு எதிராகவும், கொரோனா வைரஸ் பாதித்தவர்களை காப்பாற்றவும் மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், 5 மருத்துவர்கள் சேர்ந்து செய்த டிக் டாக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டே 5 மருத்துவர்கள் ஒருவர் பின் ஒருவராக கையில் பதாகையுடன் நகர்ந்து செல்கின்றனர். அந்த பதாகைகளில் “தயவுசெய்து எங்களுக்காக வீட்டில் இருங்கள்” என எழுதப்பட்டிருக்கிறது.