கொரோனாவை குணமாக்க இந்த அணுக்களை பிரித்தெடுக்க வேண்டுமாம்.. சீனா எடுத்துள்ள புதிய முயற்சி

Report
419Shares

கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்து பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. சீனாவை விட தற்போது இத்தாலியில் மக்கள் ஒரு நாளுக்கு சரசரியாக 100-க்கும் மேல் இறந்து வருகிறார்கள். இத்தாலி இன்று மட்டுமே 662 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து ஸ்பெயினிலும், இன்று 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்ரீ லங்காவில் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய உலக நாடுகள் பல தீவிரமாக இயங்கி வருகின்றன.

தற்போது, கொரோனா உருவான இடமான சீனா புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமானவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மூலம் சிகிச்சை தருவதுதான் அந்த நடைமுறை.

இதன்படி குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து அது சிகிச்சை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கொரோனாவுக்கு சிகிச்சை தர அமெரிக்க மருத்துவர்களும் அந்நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கோரியுள்ளனர். இது மிகப்பழங்கால நடைமுறைதான் என்றும் பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இம்முறை வெகுவாக பயன் தந்துள்ளதாகவும கூறுகிறார் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜாஃப்ரி ஹெண்டர்சன்.

இந்த முறையானது, கொரோனாவை குணப்படுத்த எந்தளவு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

14632 total views
loading...