சீனாவை அடுத்து இத்தாலியில் அதிக மரணம் நிகழ உண்மையான காரணம் என்ன தெரியுமா?..

Report
739Shares

சீனாவை விட மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலிதான். வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உண்மையில் இங்குதான் கோர தாண்டவமாடியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதும் இத்தாலிக்கு இந்த அளவுக்கு அடி விழ முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள்.

மேலும், இதுவரை இத்தாலியில் மட்டும் 6820 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும். தினசரி நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்தான். இதற்கு எப்போது முடிவு என்றே தெரியாமல் இத்தாலி முழுவதும் கண்ணீர் அலையாக இருக்கிறது.

இத்தாலியில் மட்டும் ஏன் இப்படி அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட வேண்டும்? அதற்கு என்ன காரணம்? நிறைய காரணங்கள் இருப்பதாக அந்த நாட்டின் தொற்றுநோய் சிகிச்சை மைய நிபுணர் டாக்டர் மஸ்ஸிமோ கல்லி தெரிவித்தார்.

அதில், முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதி லோம்பர்டி என்ற இடம்தான். மிலன் நகரில் இந்த பகுதி உள்ளது. மிலன் நகரம் தான் இத்தாலியிலேயே அதிக பாதிப்பை சந்தித்த நகரமும் கூட.

கொரோனோ வைரஸானது அனைத்து வயதினரையும் தாக்கும் என்றாலும், கூட வயதானவர்களுக்குத்தான் அதிக சிக்கலை கொடுக்கிறதாம்.

அதாவது இத்தாலியில் மரணமடைந்தவர்களில் 85.6 சதவீதம் பேர் 70 வயதைத் தாண்டியவர்கள் என்று கணக்கு ஒன்று சொல்கிறது. இத்தாலியில் வயதானவர்கள் அதிகம். அதாவது ஐரோப்பாவிலேயே அதிக வயதானவர்களைக் கொண்ட நாடு இத்தாலிதான்.

இங்கு 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 23 சதவீதமாகும். உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்து அதிக வயதானவர்களைக் கொண்ட நாடு இத்தாலிதான்.

இத்தாலியில் உயிரிழப்பு அதிகமாக இருக்க அங்கு வயதானவர்கள் அதிகம் இருப்பதும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், இத்தாலியில் நல்ல மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

பெரும்பாலும் அங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவும் கூட அங்கு அதிக நாள் மக்கள் உயிர் வாழ முக்கியக் காரணம். ஆனால் அதுவே தற்போது அவர்களுக்கு எமனாகி விட்டதுதான் கொடுமையானது. இதை இத்தாலியர்கள் எதிர்பார்க்கவில்லை.

இதுவரை 14 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இத்தாலியில் பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் என 3700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர வைக்கும் தகவலாகும்.