கொரோனாவிற்கு குட்பை... மருத்துவர்களின் கண்கலங்க வைக்கும் நடனக் காட்சி!

Report
816Shares

சீனாவில் உச்சக்கட்ட உயிர் பலியினை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 6 நோயாளிகளை முற்றிலும் குணமாக்கியதால் மருத்துவ ஊழியர்கள் 2 பேர் மகிழ்ச்சியில் நடனமாடிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 2760 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ஆரம்பத்திலேயே இந்த நோயினைக் கண்டறிந்து சிகிச்சை கொடுத்தால் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 6 நோயாளிகளை முற்றிலும் குணமாக்கியதால் மகிழ்ச்சியில் மருத்துவ உதவியாளர்கள் இரண்டு பேர் மகிழ்ச்சியில் உச்சக்கட்ட நடனமாடியுள்ளனர்.

‘இதயத்தை உருக வைக்கும் வீடியோ', ‘இவர்கள் நிஜ ஹீரோக்கள்' போன்ற தலைப்புகளுடன் பலரும் அந்த நடன வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

32246 total views
loading...