3.40 கோடி கிடைத்த பணத்தை மொத்தமும் அறக்கட்டளைக்கு கொடுத்த சிறுவன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Report
939Shares

கடந்த நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தன்னை யாராவது கொலை செய்துவிடுங்கள் என தன்னுடைய அம்மாவிடம் அழுது புலம்பும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காண்போரைக் கண்கலங்க வைத்தது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவாடன், மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் அவன் உடல் வளர்ச்சிக் குன்றி காணப்படுகிறான். இதனால் சக மாணவர்களால் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த அந்த சிறுவன் தன்னுடைய தாயிடம், “ஒரு கயிறு கொடுங்கள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை நீங்களே கொலை செய்துவிடுங்கள். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது”.எனக் கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறான். இதனை வீடியோவாக எடுத்த அவனுடைய தாய் அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

மேலும், ஒரு தாயாக நானும், நமது கல்வி முறையும் தோற்றுவிட்டோம். உருவ கேலி எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, குவாடனுக்கு ஆதரவாக பலரும், சிறுவன் குவாடனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக குவாடனுடன் நாங்கள் இருக்கிறோம் என பல பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வுல்வரின் பட புகழ் ஹூஜ் ஜாக்மேன், கூடைப்பந்து வீரர் எனெஸ் காட்னர் உள்ளிட்ட பலர் குவாடனுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

ஹூஜ் ஜாக்மேன் ‘இனி நானும் உனது நண்பன்’ என கூறி வீடியோ வெளியிட்டார். மேலும் பலர் எங்களை நண்பனாக ஏற்றுக்கொள் குவாடன் என அச்சிறுவனுக்கு Friendship Proposeம் செய்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் எரிக் ட்ரம்ப் அந்த சிறுவன் குவாடன் அழுவது இதயத்தை நொறுக்குவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரஹ்பி போட்டியில் சிறப்பு விருந்தினராக குவாடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இவருக்கு குவிந்த பணத்தை கொண்டு, குவாடன் மற்றும் அவரது தாயை டிஸ்னிலேண்டை சுற்றி பார்க்குமாறு வழங்கப்பட்டது. ஆனால் குவாடனோ இந்த பணம் மொத்தத்தையும் ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு அனுப்புமாறு கூறிவிட்டான்.

டிஸ்னிலேண்ட் செல்வதற்காக தனக்கு திரட்டி கொடுக்கப்பட்ட 3.40 கோடி ரூபாய் அன்பளிப்பை ஒரு அறக்கட்டளைக்கு கொடுத்து தன் தன்பிக்கை உலகுக்கு காட்டியுள்ளார் குவாடன். இதனால் இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

28556 total views
loading...