2500 பேரை பலி வாங்கிய கொரோனா... மக்களின் பரிதாபநிலையைப் பாருங்க!

Report
615Shares

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பிளாஸ்டிக் கவரால் உடலை மூடியபடி, விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட 25 நாடுகளுக்கும் மேல் பரவி வருகிறது. சீனாவில் மட்டுமே கொரோனாவால் 2592 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து ஹாமில்டன் தீவு வரை செல்லும் விமானத்தில் ஆண்-பெண் ஜோடி இருவரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் பிளாஸ்டிக் கவர்களால் உடலை மூடிக்கொண்டு பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பலரும் கடைபிடிக்கப்போவதாகவும், இது சிறந்த யோசனை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

24919 total views
loading...