வளர்ச்சி குன்றிய 9 வயது சிறுவனை கேலி செய்வதால்.. தூக்கு கயிறு கேட்டு தாயிடம் கதறல்.. நெஞ்சை உருகவைத்த காட்சி

Report
2697Shares

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று தனது 9 வயது மகன் குவார்டன் அழுகும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

தலை பெரியதாகவும், கை, கால்கள் வளர்ச்சி குன்றி காணப்படும் தன்னை பள்ளியில் உள்ள அனைவரும் கேலி செய்து கொடுமைப்படுத்துவதாக கூறி சிறுவன் கதறும் வீடியோ பலரது நெஞ்சங்களையும் உலுக்க வைத்துள்ளது.

அந்த வீடியோவில், சிறுவன் எனக்கு ஒரு கத்தியை கொடுங்கள் நான் என்னை கொலை செய்துகொள்கிறேன் என கூறுவது காண்போர் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.

மேலும், வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் #TeamQuaden என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிறுவனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.

108449 total views
loading...