கரையோரம் இறந்து கிடந்த ஆமை.. வயிற்றில் இருந்ததை கண்டு பேரதிர்ச்சியடைந்த அதிகாரிகள்.. பகீர் காணொளி

Report
980Shares

இந்தோனேஷிய நாட்டில் உள்ள தீவுப்பகுதியில் உள்ள கடற்கரையில் இறந்து கிடந்த ஆமையை அதிகாரிகள் செய்த சோதனையில், ஆமையின் இறப்பிற்கான காரணத்தை கண்டு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இந்தோனேஷியா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமையை கண்ட அதிகாரிகள், ஆமை இளம் வயதுடையது என்பதை அறிந்துள்ளனர். இதனையடுத்து ஆமையின் இறப்பிற்க்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை ஆராய்ந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஆமையின் உடலில் உள்ள குடலை பார்த்த நேரத்தில், அதில் நீண்ட பிளாஸ்டிக் துண்டு ஒன்று இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் துண்டின் மூலமாக ஆமை அடுத்தடுத்து சாப்பிட்ட உணவுகள் செல்ல வழியின்றி தடுத்து நிறுத்தியுள்ளது.

ஆமையின் உள்ளே இருந்த பிளாஸ்டிக் விஷமாக மாறியிருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆமை கடலில் இருக்கும் நேரத்தில் பிளாஸ்டிக்கை சாப்பிட்டு இருந்துள்ளதால் உயிரிழந்துள்ளது என்று அதிகாரிகள் வருத்ததுடன் தெரிவித்தனர்.

31746 total views
loading...