கொரோனா வைரஸ் தாக்கியவர்களுடன் நடனமாடும் மருத்துவர்கள்.. வியப்பில் பார்வையாளர்கள்.. வைரல் காணொளி..!

Report
102Shares

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுடன் டாக்டர்கள் உற்சாக நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் இரவு, பகல் பாராமல் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எனினும் இந்த கொடிய நோய் தங்கள் உயிரை பறித்து விடுமோ என்ற அச்சத்துடனேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை கொரோனா வைரசால், 1.483 பேர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தமுடியாமல் சீனா திணறி வருகிறது. ஆனாலும் மன உறுதியோடு இரவு பகல் பாராமல் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் உறக்கமில்லாமல் அந்நாட்டு மருத்துவர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனாவின் பிறப்பிடமான வுகான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளனர். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.