உலகிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. 27 பிரசவம் 69 குழந்தைகள்.. வெளியான சுவாரசிய தகவல்..!

Report
158Shares

நாட்டில் தற்போதுள்ள வாழ்க்கை முறையில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதே சவலாக இருக்கிறது. ஆனால் நமது முன்னோர்கள் ஒரு களம் அல்லது இரண்டு களம் என குழந்தைகளை சுகப்பிரசவத்தில் பெற்று வளர்த்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஒரு களம் என்றால் 12 குழந்தைகள், இரண்டு களம் என்றால் 24 குழந்தைகள் ஆகும்.

இந்நிலையில், தற்போது உலக அளவில் இதுவரை அதிக குழந்தைகள் பெற்ற பெண் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா நாட்டைச் சேர்ந்த Feodor Vassilyev என்பவரின் முதல் மனைவிக்கு 69 குழந்தைகள் பிறந்துள்ளது.

1725 - 1765 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 27 பிரசவத்தில் 16 முறை இரட்டைக் குழந்தைகளும், ஏழு முறை மூன்று குழந்தைகளும், நான்கு முறை நான்கு குழந்தைகளும் மொத்தமாக 27 பிரசவத்தில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இதில், இரண்டு குழந்தைகள் மட்டும் உயிரிழந்த நிலையில், மீதம் 67 குழந்தைகள் நலமுடன் இருந்துள்ளனர். மேலும் Feodor Vassilyev இரண்டாவது மனைவிக்கு 18 குழந்தைகள் பிறந்துள்ளது.

Feodor Vassilyev என்பவருக்கு மொத்தமாக 80 குழந்தைகள் பிறந்த நிலையில் அவர்களின் 82 பேர் நலமுடன் வாழ்ந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.