தாயை காப்பாற்ற பாடிய சிறுமி.. பார்த்தப்படியே உயிரைவிட்ட தாய்.. நேரலையில் நிகழ்ந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்!

Report
276Shares

தாயின் மருத்துவச் செலவுகளுக்காக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு வென்ற சிறுமியை, நேரலையில் பார்த்தபடியே அவரது தாய் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

இந்தோனேசியா நாட்டில் லிகா தங்தத் என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு இந்திய மதிப்பில் 26 லட்சம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.

உயிருக்குப் போராடும் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக இந்தப் போட்டியில் ஜன்னா என்ற 14 வயது சிறுமி பங்கேற்றார். இதில் தனது தாயை நினைத்து உருக்கமாகப் பாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜன்னா அதில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார். அவரது பாடலை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ஜன்னாவின் தாய் நெகிழ்ந்து போய் கண்ணீருடன் கேட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.

இதனைக் கேட்ட அந்தச் சிறுமி மேடையிலேயே கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

loading...