கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்... சீன பெண் சாப்பிடும் உணவைக் கண்டு அலறும் நெட்டிசன்கள்! தீயாய் பரவும் காட்சி

Report
539Shares

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொலோனா வைரஸால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தற்போது 41 பேர் பலியானதுடன், 237 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகின்றதாம்.

மிகவும் வேகமாக பரவி வருவதால் அண்டைநாடுகளுக்கும் பரவி வரும் இந்த வைரஸால், சீனாவில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

வைரஸின் தாக்கத்தினால் வுஹன் நகரத்திற்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடைவிதிக்கப்பட்ட நிலையில், நோயாளிகளை மிக இறுக்கமாக மூடிய பைகளில் அடைத்து வைத்து, ஆக்ஸிஜன் டியூப் வழியாக நோயாளிகளை பாதுகாத்து வருகின்றனர்.

மிகவும் சாதாரண அறிகுறியில் தோன்றும் இந்த வைரஸ் மரணத்தினை மிக விரைவில் ஏற்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

இந்நிலையில் மருத்துவமனையில் பணியாற்றிய சீனியர் மருத்துவரான ஸின்ஹுவா(61) என்பவருக்கு இந்த வைரஸ் தாக்கியதால், 9 நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நோய்க்கு மருந்துகள் எதுவும் கண்டறியப்படவில்லை. வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக நுரையீரல் மற்றும் வைரஸ் தாக்குதல் நிமோனியா காய்ச்சல், நுரையீரலின் வீக்கம் போன்றவை ஏற்பட்டு உயிரிழந்து விடுகிறார்களாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்த நோய் தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ குழுக்கள் அனைவரும் தீவிரமாக போராடி வருகின்றனர்.

கொடிய வைரஸ் கொரானா, சீனாவின் வுஹான் நகரில் உள்ள பாம்பு, வவ்வால்கள், கோழி மற்றும் பிற பண்ணை விலங்குகளை விற்கும் கடல் உணவு சந்தையில் இருந்து உருவாகி, பரவியதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில்தான், வவ்வால் சூப்பை, சீனா பெண் ஒருவர் சப்புக்கொட்டி குடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த, ஆப்பிள் டெய்லி முதன்முதலில் வெளியிட்டது இந்த வீடியோவை. அந்த பெண் அவசரமாக சாப்பிடுவதும், சாப்ஸ்டிக் மூலம் ஒரு வவ்வாலை கவ்வி பிடித்தபடி சூப் குடிப்பது போலவும் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது.

அப்போது அங்கே இருந்த ஒரு ஆண் சீன மொழியில், அப்பெண்ணை, இறைச்சியை மட்டுமே சாப்பிடச் சொல்கிறார். அதுவும் ஆடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதனை அவதானித்த பலரும், கொரானா வைரஸுடன் போராடும் நேரத்தில் வெளவால்களால் செய்யப்பட்ட உணவுகளை உட்கொள்வது அபாயத்தை அதிகரிக்கும் என்று சிலர் எடுத்துரைத்து வருகின்றனர்.