குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கிய வேலைக்கார பெண்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்..!

Report
378Shares

வீட்டில் வேலை பார்க்கும் பெண் குழந்தையை கொதிக்கும் நீரில் கையை அழுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மியான்மரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு வீட்டில் குழந்தை பார்த்துகொள்ளும் பராமரிப்பு வேலையில் சேர்ந்துள்ளார்.

வீட்டின் உரிமையாளரும், மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டதால் குழந்தையை வேலைக்காரி பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று குழந்தையின் கையில் தீக்காயம் ஏற்பட்டதால், உடனடியாக பெற்றோர்கள் குழந்தை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் குழந்தையின் கையில் இருந்த தீக்காயத்தை பார்த்தால், இது விபத்தாக ஏற்பட்டது போல தெரியவில்லை என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் தங்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்துள்ளனர். அப்போது, அவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. அதில் குழந்தையை வைத்து கொண்டிருந்த அந்த வீட்டு வேலைக்கார பெண், குழந்தையின் கையை அடுப்பில் கொதிக்கும் தண்ணீரில் வைத்து அழுத்தியுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.