நீந்தும் மீனை பார்த்திருப்போம்... ஆனால் நடக்கும் அதிசய சுறா மீனை பார்த்ததுண்டா?.. அசந்துபோன விஞ்ஞானிகள்..!

Report
623Shares

உலகத்தில் அன்றாடம் பல விசித்திரமான நிகழ்வுகள் நடப்பது உண்டு. அவை அதிகமாக சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருவதும் உண்டு. அப்படி ஒரு நிகழ்வை தான் இங்கும், தண்ணீரில் நீந்து மீனை கண்டிருப்போம், ஆனால் நடக்கும் சுறா மீனை பார்த்திருக்க மாட்டோம்.

ஆஸ்திரேலிய நாட்டின் கடல் பகுதியில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது, அப்போது கடலுக்குள் நடக்கும் சுறாவை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது மிகவும் விசித்திரமாகவும், வித்தியாசமாகவும் காட்சி அளிக்கிறது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் 12 ஆண்டுகளாக வடக்கு ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஆய்வு நடத்தி வந்தார்கள்.

தற்போது, புள்ளிச் சுறா வகையை சேர்ந்த மீனை புதிதாக பார்த்துள்ளனர். விஞ்ஞானிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்தச் சுறா தனது பக்கவாட்டுத் துடுப்புகளை தேவைக்கு உபயோகித்து நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த விஞ்ஞானிகள், நடக்கும் புள்ளிச்சுறாவின் வேறு குடும்பங்களைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்.

you may like this..
20720 total views