ஒரு நொடியில் சிறுவனை தூக்கி சென்ற மலைசிங்கம்.. அதிர்ந்துபோன தந்தை செய்த காரியம்..!

Report
473Shares

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், உள்ள காட்டு பூங்கா ஒன்றில் ஒரு குடும்பத்தினர் நடைபயணம் சென்றிருக்கின்றனர். அவர்களின் மூன்று வயது சிறுவன் அனைவருக்கும் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறான். அப்போது, திடீரென பாய்ந்து வந்த மலை சிங்கம் ஒன்று மூன்று வயது சிறுவனை முதுகில் கவ்வி தூக்கி கொண்டு ஓடியிருக்கிறது.

உடனே அதிர்ச்சியடைந்த தந்தை, சிறுவனை காப்பாற்ற உடனடியாக தான் வைத்திருந்த பையை சிங்கத்தை நோக்கி வீசியிருக்கிறார். பையை கண்டதும் சிறுவனை போட்டுவிட்டு பையை தூக்கி கொண்டு மரத்தின் மேல் ஏறிக்கொண்டது சிங்கம்.

அதன் பின்னர் மீட்கப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இதுகுறித்து பேசியுள்ள வனத்துறை அதிகாரிக மலை சிங்கங்கள் மனிதர்கள் மேல் தாக்குதல் நடத்துவது மிக அரிதாகவே நடைபெறுவதாக கூறியுள்ளனர். 1986ல் இருந்து இதுவரை 17 பேர் மலை சிங்கங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மூவர் உயிரிழந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

15684 total views