அரச குடும்பத்தை விட்டு மனைவிக்காக இயக்குனரிடம் கெஞ்சிய இளவரசர்... தீயாய் பரவும் காட்சியினால் வருத்தத்தில் அரச குடும்பம்

Report
215Shares

இங்கிலாந்து இளவரசர் ஹாரி தன் மனைவிக்காக திரைப்பட இயக்குனர் ஒருவரிடம் வேலை கேட்கும் காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பதவியில் இருந்த விலகிக்கொள்வதாக இருந்த தருணத்தில், ராணி இரண்டாம் எலிசபெத் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதில் ஹாரியும், மேகனும் சுதந்திரமாக புதிய வாழ்க்கையினை தொடங்க இருப்பதற்கு நாங்கள் முழு ஆதரவைக் கொடுக்கின்றோம் என்று தெரிவித்த நிலையில் தனது மனைவியுடன் ஹாரி அரச குடும்பத்தினை விட்டு தற்போது கனடாவில் குடியேறியுள்ளார்.

சுயமாக வேலை செய்து பிழைக்கப்போவதாக கூறியிருந்த ஹாரி, இயக்குனர் ஒருவரிடம் தனது மனைவிக்கு வேலை கேட்டது தெரிந்ததே.. ஆனால் தற்போது குறித்த காட்சி தீயாய் பரவி வருகின்றது.

பட்டத்து இளவரசராக இருந்த ஹாரி குடும்ப செலவிற்காக இயக்குனரிடம் வேலை கேட்பதைக் கண்ட அரச குடும்பம் கடும் மனவேதனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.