17 வயதில் அதிக அளவு முடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பெண்.. எப்படி தெரியுமா?

Report
258Shares

குஜராத் மாநிலம் மோடசா என்னும் பகுதியைச் சேர்ந்த நிலன்ஷி படேல் என்னும் 17 வயது பெண் ஒருவர் தனது தலைமுடியை நீளமாக வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது முடியை 6 வயதில் இருந்தே வளர்த்து வரும் நிலன்ஷி கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 15 வயதில் 170 செ.மீட்டர் வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இதற்கு, முன்னர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் 152.5 சென்டி மீட்டர் முடி வளர்த்து சாதனை படைத்தார். பிறகு அந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார்.

இவர்கள் இருவரின் சாதனையையும் நிலன்ஷி படேல் கடந்த 2018 ஆம் ஆண்டு 170 செ. மீட்டர் வளர்த்து முறியடித்தார்.

இந்நிலையில் தற்போது, 190 செ.மீட்டர் வளர்த்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளார் நிலன்ஷி படேல். இதுபற்றி அவர் கூறுகையில், ”தான் எங்கு சென்றாலும் அனைவரும் தன்னிடம் செல்பி எடுத்துக்கொள்வதாகவும், தன்னை ஒரு செலப்ரிடி போல் பார்ப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்”. நிலன்ஷி படேல்.

9044 total views