ஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி! கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்

Report
300Shares

உகாண்டாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் என நினைத்து ஆண் ஒருவரை திருமணம் செய்து ஏமாந்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவைச் சேர்ந்த ஷேக் முகம்மது முதும்பா(27). இவர் முஸ்லீம் மத போதகராக இருந்து வருகின்றார். இவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்த பெற்றோர், ஸ்வாபுல்லா நபுகீரா என்ற பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு பின்பு ஒரு முத்தம் கூட கொடுக்காமல் ஷேக் முகம்மதை பல காரணங்களைக் கூறி ஸ்வாபுல்லா நபுகீரா தள்ளி வைத்துள்ளார். கணவரை தள்ளி வைத்திருந்தாலும் வீட்டில் இருக்கும் மற்ற உறவினர்களை நன்றாக கவனித்து கொள்வாராம்.

இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் தனது வீட்டில் திருட்டு போயுள்ளது என்றும், திருடியவர் ஸ்வாபுல்லா நபுகீரா தான் என்று பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

பொலிசார் தனது பாணியில் விசாரிக்கவே ஸ்வாபுல்லா நபுகீரா பெண் அல்ல ஆண் என்பது தெரியவந்துள்ளது. இதனால் உச்சக்கட்ட அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார் ஷேக் முகம்மது. அதுமட்டுமின்றி ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டதால் இமாம் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் முதும்பா.

loading...