ஆண்குறி வடிவில் கரை ஒதுங்கிய அபூர்வ மீன்கள்.. ஆச்சர்மடைந்து பார்வையிட்ட மக்கள்.. எங்கு தெரியுமா?

Report
1005Shares

இந்த உலகம் முழுவதும் பல விசித்திரமான விஷயங்கள் தினந்தோறும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. பல விசித்திரமான மனிதர்கள் மற்றும் விசித்திர விலங்குகள் என உலகம் முழுவதும் பல மாறுபட்ட விசித்திரங்கள் நிறைந்திருக்கின்றன.

அப்படி, இங்கே நாம் பார்ப்பதே ஒரு வினோதமான விஷயம் பற்றித்தான். ஒரு விசித்திரமான மீனைப் பற்றித்தான் நாம் இங்கு காணப்போகிறோம்.

கலிஃபோர்னியா கடற்கரையில் மிகவும் வினோதமான தோற்றமளிக்கும் ஆண்குறி வடிவ மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. வடக்கு கலிபோர்னியாவில் பலத்த குளிர்கால புயல்களைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆண்குறி மீன்கள் கலிபோர்னியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. இதை பார்க்கும் மனிதர்கள் இதன் வடிவத்தைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர்.

மேலும் இந்த மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இந்த மீன்கள் சுமார் 10 அங்குல அகலம் கொண்டவை. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள டிரேக்ஸ் கடற்கரையில் பல மீன்கள் மற்றும் வினோதமான ஆண்குறி வடிவ மீன்கள் கிடக்கின்றன.

இதனை ஆண்குறி மீன்கள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு உருவாகியவை எனபது குறிப்பிடத்தக்கது.

loading...