கடற்கரையில் குப்பை பொறுக்கியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்? இதன் மதிப்பு 500,000 டொலராம்!

Report
229Shares

தாய்லாந்தில் கடற்கரை ஓரத்தில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் நபருக்கு கிடைத்த பொருள் இன்று பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

Surachet Chanchu என்ற நபர் கடந்த புதன்கிழமை கடற்கரை ஓரமாக கிடக்கும் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை சேகரித்து வரும் வேலையை செய்து வந்துளளார். அத்தருணத்தில் சுமார் 37 பவுண்ட் எடை கொண்ட திமிங்கல வாந்தி ஒன்றினை மணலுடன் கிடந்ததை கண்டெடுத்துள்ளார்.

மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் அம்பெர்கிரிஸ் எனக் கண்டறியப்பட்டால் இதன் விலை 500,000 டொலர் விலை போகும் என்று கூறப்படுகின்றது.

இவர் கண்டெடுத்த இந்த பொருளை சாதாரணமாக சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரைக் கொண்டு சோதனை செய்த போது, இது உண்மையிலேயே வாசன திரவியம் போன்றே காணப்பட்டுள்ளது.

பொதுவாக திமிங்கலத்தின் செரிமானப் பகுதியில் இருந்து வெளிவரும் கழிவுகளை வாசனை திரவிய தொழிலில் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

loading...