படுக்கையறையில் சிறுவன் செய்த செயல்.. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் செய்த காரியம்.. அதிர்ச்சி தகவல்.!

Report
110Shares

அமெரிக்காவில் 5 வயது சிறுவன் படுக்கையறையிலேயே சிறுநீர் கழித்ததால், ஆத்திரமடைந்த தந்தை அடித்துள்ளதால், சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ப்ரூயண்ட், ஜோயன் குன்னிங்கம் என்ற தம்பதிகளுக்கு ஏஜே என்ற 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் கடந்த மாதங்களுக்கு முன்பு படுக்கையறையிலேயே சிறுநீர் கழித்து இருக்கிறான்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுவனை பலமாக தாக்கியுள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்த அவரது தாயாரும் பலமாக அடித்துள்ளார். இதனால் பலத்த காயம் ஏற்பட்ட சிறுவன் அங்கேயே உயிரிழந்துள்ளான்.

உடனே அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுவனை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்து இருக்கின்றனர். பின்னர் இது காவல் துறைக்கு தெரிய வந்து தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலை செய்த தாய்க்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த மாதம் தண்டனை வழங்கப்பட உள்ளது. சிறுவனின் தந்தை ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

4446 total views