கோமாவில் இருந்த தாய்.. குழந்தையின் பசிக்குரல் கேட்டு எழுந்த அதிசயம்.. பின்பு நடந்த சோகம்..!

Report
282Shares

குழந்தையின் பசி குரல் அழுகையை கேட்டு கோமவில் இருந்த தாய் ஒருவர் கண் விழித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டின் வடக்கு மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் மரியா பெர்ரேயரா(42).

இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த மாதத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தின் மூலம் விபத்துகுள்ளானார். அதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் சுயநினைவையும் இழந்துள்ளார்.

அதன் பின்னர் நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கோமாவில் இருந்த இவருக்கு சுயநினைவு திரும்பாததால், அவரின் மூளை செயலிழக்க நேரிடும் என்பதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனை கேட்டு அவரது கணவர் மார்ட்டின் அதிர்ச்சியடைந்தாலும், நம்பிக்கையும் மனைவிக்கு சரியாகிவிடும் என்று சிகிச்சை அளிக்க வற்புறுத்தினார்.

இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு அவரின் இளைய மகள் பாசத்துடன் அருகில் படுத்து, பசிக்கிறது என தாய்ப்பால் கேட்டுள்ளது. அப்போது தான் 30 நாட்கள் சுய நினைவை இழந்த தாய் குழந்தையின் பசி குரல் கேட்டதும் சட்டென்று கண் விழித்துள்ளார்.

உடனே இதனைக்கண்ட கணவர் மற்றும் குடுபத்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பெர்ரேயராவின் தாய்மை உணர்வை கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் இந்த ஆச்சரியம் சில நிமிடங்கள்தான் நீடித்தது. தனது குழந்தையின் பசியை தீர்த்துவிட்டு பெர்ரேயரா மீண்டும் கோமாவுக்கு சென்று விட்டார்.

எனினும் மகளின் குரலை கேட்டதும் பெர்ரேயரா கோமாவிற்கு முன் இருந்ததை போல இயல்பாக எழுந்து தாய்ப்பால் கொடுத்ததால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புவதாக அவரது கணவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.