முட்டை மதிப்பெண் எடுத்த மாணவியை பற்றி சுந்தர் பிச்சை.. என்ன சொன்னார் தெரியுமா?

Report
107Shares

மாணவி ஒருவர் இயற்பியல் பாடத்தில் 0 மார்க் மதிப்பெண் பெற்றதாக ட்விட்டரில் தெரிவித்ததை கூகுள் இயக்குனர் சுந்தர் பிச்சை வாழ்த்தியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கலிப்ந்போர்னியா பல்கலைகழகத்தில் வானியற்பியலில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி தான் சரபினா நான்ஸ்.

இவர் விண்வெளி காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூப்பர்நோவா கோள்வெடிப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில், ”நான் நான்கு வருடங்களுக்கு முன்பு குவாண்டம் இயற்பியல் பாடம் படித்து வந்தேன். ஆனால் அதில் நான் பூஜ்ஜியம் மதிப்பெண்தான் எடுத்தேன். பிறகு குவாண்டம் பாடத்திலிருந்து வெளியேறி விண்வெளி இயற்பியலை தேர்ந்தெடுத்தேன். ஆகவே உங்களால் சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை. எது என்பதை தேர்வு செய்ய வேண்டும்” என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.

இதனைக்கண்ட கூகுள் நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சை, அதற்கு பதிலளிக்கும் விதமாக “சரியாக சொன்னீங்க” என்று கூறியுள்ளார். இதனைக்கண்ட பலரும் அந்த பெண்ணிற்கு பல கருத்துகளை கூறி வருகின்றனர்.

4386 total views