கணவனை பிரிந்து குழந்தையை இழந்து தனிமையில் தவித்த பெண்... தற்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த செயல்!

Report
295Shares

பிரேசிலில் பெண் ஒருவர் கண்ணாடி போத்தல்களை வைத்து வீடு கட்டியுள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சா பாலோ மாகாணத்தில், இடாவ்காவ் நகரைச் சேர்ந்த இவோன் மார்டின். விவசாயியான இப்பெண் கணவரைப் பிரிந்து தனது கைக்குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். சமீபத்தில் அவரது குழந்தை உடல் நலக்குறைவினால் இறந்துள்ளது.

இதனால் கடும் மனஉளைச்சலிலும், விரக்தியிலும் இருந்த இப்பெண், அதிலிருந்து விடுபடுவதற்கு வழியைத் தேடியவர், சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி போத்தல்கள் குவிந்து கிடப்பதை அவதானித்து, அவற்றினைப் பயன்படுத்தி வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்.

அதன்படி 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு 3 மீற்றர் உயரமும், 9 மீற்றர் அகலமும், 8 மீற்றர் நீளமும் கொண்ட அழகான வீட்டினைக் கட்டி முடித்துள்ளார். இந்த வீட்டில் படுக்கையறை, சமையலறை, கழிவறை என அனைத்துமே கண்ணாடி போத்தலால் கட்டப்பட்டுள்ளது.

குறித்த போத்தல் வீடு கட்டுமான செலவுகளை குறைப்பதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுவதாக இவோன் மார்ட்டின் கூறியுள்ளார்.