அனகோண்டா மலைப்பாம்பும் சிறுத்தையும் சண்டையிடும் அதிர்ச்சியான வைரல் காட்சி..!

Report
324Shares

இணையத்தில் தற்போது ஒரு காட்சி வைரலாக பரவியுள்ளது. அது என்னவென்றால் மிகவும் அரிய நிகழ்வாக அனகோண்டா மலைப்பாம்பும், சிறுத்தைப்புலி ஒன்றும் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சி தான் அது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் மரா ரிசர்வ் வனப்பகுதியில், அனகோண்டா மலைப்பாம்பும், சிறுத்தைப்புலியும், ஒன்றுக்கொன்று எதிராக சண்டையிட்டு கொண்டன.

சிறுத்தைப் புலி பார்ப்பதற்கு அளவில் சிறியதாக காணப்படுகிறது. இந்த சண்டை உணவுக்காக நடந்த சண்டையைப் போல தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஒன்று தற்காத்துக் கொள்ள நடந்த சண்டையாக வல்லுனர்கள் கருதுகின்றனர்.

மேலும், சண்டையின் ஆரம்பத்தில் மலைப்பாம்பின் கை ஓங்கிக் காணப்பட்டது. சிறுத்தையை முழுவதுமாக சுற்றி அதனை விழுங்குவதற்கு மலைப்பாம்பு முயற்சித்தது. இருப்பினும், லாவகமாக செயல்பட்ட சிறுத்தை, பாம்பின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டது.

இறுதியாக, மலைப்பாம்பின் தலையைக் கடித்துக் கொன்றது சிறுத்தை. இந்த அரிய வீடியோ இணையதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வீடியோவை இங்கே அழுத்திப்பார்க்கவும்