மருந்து கடையில் திருட வந்த திருடன் மூதாட்டிக்கு கொடுத்த மருத்துவ முத்தம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி..!

Report
122Shares

திருடன் ஒருவன் திருட சென்ற இடத்தில் திருடியபோது மூதாட்டி ஒருவர் பயந்ததால் அவருக்கு மருத்துவ முத்தத்தை வழங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள மருந்துக்கடை ஒன்றில், திடீரென்று புகுந்த இரண்டு திருடர்கள் கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். அப்போது அந்த கடையின் உள்ளே மருந்து வாங்க வந்த மூதாட்டி ஒருவர், கொள்ளை சம்பவத்தை பார்த்து பதற்றத்தோடு நின்றிருந்தார்.

அப்போது அதனை கவனித்த ஒரு திருடன், அவரிடம் வந்து உங்கள் பணத்தை எடுங்கள் என்று மிரட்டியுள்ளான். அதற்கு அந்த மூதாட்டி பணம் என்னிடம் இல்லை என பயத்தில் அலறியுள்ளார். இதனால் அவரை அமைதிப்படுத்துவற்காக அந்த திருடன் அந்த மூதாட்டியின் நெற்றியில் முத்தமிட்டு அவரை சமாதானப்படுத்தினான்.

பின்பு திருட வந்த இருவரும் அந்த மருந்துகடையிலிருந்த 17 ஆயிரம் மற்றும் சில மருந்து பொருட்களையும் அங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

loading...