வெடிகுண்டு வைத்து ஏ.டி.எம்மில் திருடச்சென்ற நபர்... பின்னர் நேர்ந்த கொடூர சம்பவம்

Report
192Shares

ரஷ்யாவில் நபர் ஒருவர் முகத்தை மறைத்துக்கொண்டு ஏடிஎம் மெஷினை உடைக்க நாட்டு வெடிகுண்டு வைத்து வைத்து வெடிக்க செய்த போது திருடனும் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யாவில் செரபோவெட்ஸ் என்ற நகரில், உள்ள செபர் வங்கியின் ஏடிஎம் மையம் ஒனறில் பணத்தை கொள்ளையடிக்க, இரண்டு திருடன்கள் புகுந்துள்ளனர்.

அப்போது, ஒருவன் மட்டும் வெளியில் நிற்க, மற்றொருவன் உள்ளே சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க, அவன் முயற்சி செய்துள்ளான்.

உடைக்க முடியாத காரணத்தால், தான் கொண்டு வந்த பையிலிருந்து, வீட்டில் செய்த நாட்டு வெடிக்குண்டு ஒன்றை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்தியுள்ளான்.

அப்போது, திடீரென நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன், திருடன் மீதே வெடித்து சிதறியது. இதில் ஏடிஎம் மையம் சுக்கு நூறாகியது. வெடிகுண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே திருடன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்நிலையில், வெடிகுண்டு வெடித்ததால், அக்கம் பக்கத்தினர் பயந்து, அலறினர். திருடனுடன் வந்த மற்றொரு திருடன் தப்பியோடியுள்ளான். இருவர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...