பெண் ஒருவரின் வலையில் சிக்கிய இரண்டு வாய் கொண்ட அதிசய மீன்.. மிரண்டு போன பார்வையாளர்கள்..!

Report
177Shares

பெண் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அரிய வகையில் இரண்டு வாய் உள்ள மீன் ஒன்று சிக்கியுள்ளது.

நியூயார்க்கில் பெண் ஒருவர் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஒரு அரிய வகை மீனை பிடித்தார். அந்த மீனுக்கு இரண்டு வாய் உள்ளதை கண்டு ஆச்சர்யபட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “எனது கண்னை என்னாலே நம்ப முடியவில்லை. நான் பிடித்த மீனுக்கு 2 வாய்கள் இருந்தன. அந்த மீனுடன் சில புகைப்படங்கள் எடுத்த பின் மறுபடியும் அதனை திரும்ப தண்ணீருக்குள்ளே விட்டு விட்டேன்” என்றார் டெபி கெதர்ஸ்.

இந்த மீன் புகைப்படமானது பேஸ்புக்கில் Knotty Boys Fishing என்பதில் பதிவு செய்யப்பட்டது. இணையதளத்தில் வெளியாகிய பின் இந்த புகைப்படத்தை 6000 பேர் பகிர்ந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான பேர் தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

5670 total views
loading...