குடையின் அதிர்ஷ்டத்தால் ஒரு அடி தூரத்தில் உயிர் பிழைத்த நபர்.. வெளியான பகீர் காட்சி..!

Report
241Shares

அமெரிக்காவில் அட்ரியன் என்னும் நகரம். கடந்த சில தினங்களாக இங்கு வானிலை மிகவும் மோசமாக உள்ளது. அதிகளவில் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் இந்த நகரை சேர்ந்த நபர் ஒருவர் சாலையில் குடையை பிடித்து நடந்து கொண்டிருந்தார். அவர் நடந்து கொண்டிருந்தபோது ஒரு அடி தள்ளி மின்னல் ஒன்று பலமாக தாக்கியுள்ளது. மிக அருகாமையிலேயே மின்னல் ஒன்று தாக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரோமலஸ் கையில் வைத்திருந்த குடையை கீழே போட்டு நிலை தடுமாறினார்.

பின்னர் சுதாரித்து, குடையை எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து புறப்பட்டார். அதாவது ஒரு அடி தூரத்தில் அதிர்ஷ்டவசமாக ரோமலஸ் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவமானது அருகில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியினை Romulus McNeill என்பவர் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

11069 total views