தென் ஆப்பிரிக்காவில் இறந்த யானையின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஆவணப்பட இயக்குனரான ஜெஸ்டின் சுலிவான் அண்மையில் போட்ஸ்வானா பகுதியின் வனத்திற்குச் சென்றுள்ளார்.
அந்த வனத்தில் உள்ள விலங்குகளின் அரிய புகைப்படங்களை எடுக்க நவீன புகைப்பட கருவிகளுடன் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவின் புகைப்பட கருவியில் யானை ஒன்று, தும்பிக்கை தனியாகவும், உடல்பகுதி தனியாகவும் துண்டிக்கப்பட்டு இறந்துக் கிடந்த துயர காட்சி பதிவாகியுள்ளது.
அதனை பார்த்து ஜெஸ்டின் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது பார்ப்பவர்களின் இதயங்களை கனமாக்கி வருகிறது.