பிரித்தானியாவில் இலங்கை தேயிலைக்காக அலைமோதும் கூட்டம்! ஒரு கப் டீயின் விலை ரூ.35, 100

Report
108Shares

மக்கள் அன்றாடம் காலையில் எழுந்தவுடன் விரும்பி குடிப்பது டீ. பலருக்கும் இதை காலையில் குடிக்கவில்லை என்றால் பைத்தியமே பிடிப்பது போல் இருப்பார்கள். அந்த அளவிற்கு அடிமையாகவே இருக்கிறார்கள் டீயின் மேல்.

மேலும் அலுவலங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தலைவலி ஏற்பட்டால் டீயைதான் பலரும் நாடுகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 10 கப் அருந்தும் டீ பிரியர்களுக்கு இங்கு பஞ்சமில்லை.

இருப்பினும், ஒரு டீக்கு ரூ.35,109 கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள். ஆம், லண்டனில் உள்ள பாக்கிங்காம் அரண்மனைக்கு எதிரே உள்ளதுதான் ரூபென்ஸ் உணவகத்தில் ஒரு கப் டீ 200 டாலருக்கு(இலங்கை மதிப்பில் ரூ.35 ஆயிரத்து 100) விற்பனை செய்யப்படுகிறது.

”ராயல் ஆப்டர்நூன் டீ மெனு” என பெயரிடப்பட்டுள்ள இந்த தேநீரின் விசேஷம் என்னவென்றால், நாம் எந்த சுவை தேநீர் வேண்டுமென்று தேர்ந்தெடுக்கிறோமோ, அதன் பின்னரே தேயிலை எடுக்கப்பட்டு, துல்லியமாக எடை போடப்பட்டு, சுத்தமான இயற்கை நீரில் காய்ச்சி வடிகட்டப்பட்டு பின்னர் ராஜ மரியாதையுடன் பரிமாறப்படுகிறது.

மேலும் வெள்ளிக்கோப்பையில் இந்த டீ பரிமாறப்படுகிறது. இந்த தேநீரின் ஒரிஜினல் சுவை தெரிய வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் வேறு எந்த உணவையும் உட்கொள்வதற்கு முன்னர் இந்த தேநீரை பருகும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

விலை உயர்வாக இருந்தபோதும் வாடிக்கையாளர்கள், இந்த டீயை ஒரு முறை சுவைத்துவிட்டால் மீண்டும் எப்போது சுவைப்போம்? என தோன்றும் அளவிற்கு சுவை நாக்கில் ஒட்டிக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்.

4170 total views