உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ்..! முதல் இரண்டு இடம் யார் தெரியுமா?

Report
527Shares

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் ஆண்டுத்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வருடம் வெளியான பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதாவது, உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில், பல ஆண்டுகளாக பில்கேட்ஸ் தான் முதலிடம் பெற்றிருந்தார். அவரை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், தற்போது பிரான்சின் LVMH நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்2-ம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்களின் சொத்து மதிப்பு...

ஜெஃப் பெசோஸ் - 125 பில்லியன் டாலர் சொத்துக்கள்

பெர்னார்ட் - 108 பில்லியன் டாலர் சொத்துக்கள்

பில்கேட்ஸ் - 107 பில்லியன் டாலர் சொத்துக்கள்

இந்நிலையில், சமீபத்தில் பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவர் நன்கொடை வழங்காமல் இருந்திருந்தால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

22182 total views