உலகக்கோப்பை இறுதிப்போட்டி! மைதானத்திற்குள் அரைகுறையாக ஓட முயன்ற பெண் யார் தெரியுமா?

Report
1197Shares

50 ஓவர் உலகக்கோப்பை இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் கிரிக்கெட்டின் பிறப்பிடமாக கூறப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதிக்கொண்டன.

இந்தப் போட்டியில், முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸின் அதிரடி ஆட்டத்தால் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது.

இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது, அதன் படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் களமிறங்கினர்.

இவர்கள் இருவரும் இந்த சூப்பர் ஓவரில் 15 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர், அதன் பின் ஆடிய, நியூசிலாந்து அணி 15 ஒட்டங்கள் மட்டுமே எடுத்ததால், அதிக பவுண்டரியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மிகுந்த பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இதன்மூலம், இங்கிலாந்து அணியின் 44 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது.

இதற்கிடையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பைனல் போட்டி துவங்குவதற்கு முன்பு, சமூக வலைதள பிரபலமான விடாலி என்பவரின் இணையதளத்தின் பெயரான ‘விடாலி அன் சென்சார்டு’ என வாசகம் இடம் பெற்றிருந்த பணியனை மட்டும் அணிந்திருந்த பெண் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து ஓட முயன்றார்.

இதனை கண்ட, மைதான காவலர்கள், சட்டென்று ஓடிச்சென்று அந்தப் பெண்ணை குண்டுகட்டாக தூக்கிச் சென்று விட்டனர்.

இந்நிலையில், மைதானத்திற்குள் ஓடமுயன்ற அந்த பெண் யாரென்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, ஆபாச இணையதளத்தை நடத்தி வரும் விடாலியின் தாய் தான் மைதானத்திற்குள் ஓட முயன்ற பெண் என்பதை, விடாலியே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

36555 total views